ADDED : ஏப் 23, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன், இந்திய கம்யூ., கட்சி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
2003 ஏப்.1க்கு முன் பணியில் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் மண்டலத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்நாச்சிமுத்து, திண்டுக்கல் மண்டல மாநில நிர்வாகி பாஸ்கரன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

