/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் நீக்கம்
/
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் நீக்கம்
ADDED : டிச 27, 2025 05:45 AM
மூணாறு: கட்சிக்கு விரோதமாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டதாக ஏ.ஐ.டி.யு.சி., இடுக்கி மாவட்ட செயலாளர் குருநாதன் அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இடுக்கி மாவட்டத்தில் டி.ச.9ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் மாவட்ட ஊராட்சியில் மூணாறு டிவிஷனில் இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த மோகன்குமார் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்த டிவிஷனில் போட்டியிட ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் குருநாதன் ' சீட்' கேட்டார். அவருக்கு சீட் வழங்காததால், மோகன்குமாருக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே மோகன்குமாரை வெற்றி பெற செய்யக்கூடாது என கட்சியினருக்கு கடிதம் சென்றது. அச்செயலுக்கு குருநாதன் தூண்டுதலாக இருந்ததாக தெரிந்தது. அவரிடம் கட்சிமாவட்ட குழு விளக்கம் கேட்டது.
இந்நிலையில் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் சில நாட்களுக்கு முன் இடுக்கி பைனாவ்வில் நடந்தது. அதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் குருநாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
மூணாறைச் சேர்ந்த காமராஜ் மாவட்ட தலைவராகவும், பீர்மேட்டைச் சேர்ந்த ஜோஸ்பிலிப் மாவட்ட செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

