/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜனவரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
/
ஜனவரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
ஜனவரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
ஜனவரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
ADDED : டிச 27, 2025 05:45 AM
தேனி: மாவட்டத்தில் ஜன.,6 முதல் ஜன., 29 வரை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வட்டாரம் வாரியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை சார்பில் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப் படுகிறது.
இந்த கல்வியாண்டில் வட்டாரம் வாரியாக ஒரு பள்ளியை தேர்வு செய்து ஜன., 6 முதல் ஜன., 29 வரை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண்,காதுமூக்கு தொண்டை, முடநீக்கியல், மனநலம், குழந்தைகள் நல மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முகாம்கள் ஜன.,6ல் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜன.,8 ல் போடி இசட்.கே.எம்., மேல்நிலைப்பள்ளி, ஜன.,9ல் சின்னமனுார் நகராட்சி துவக்கப்பள்ளி, ஜன., 20ல் கம்பம் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, ஜன., 22ல் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜன., 23ல் பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப்பள்ளி, ஜன.,27 ல் தேனி பி.சி., கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, ஜன.,29ல் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம்கள் நடக்கின்றன.

