/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்
/
மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்
ADDED : டிச 27, 2025 05:45 AM
கூடலுார்: கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் 8 ஆண்டுகளாக நகர்ப் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள், லோயர்கேம்ப் -கம்பம் தேசிய நெடுஞ்சாலை, 18ம் கால்வாய் கரைப் பகுதி, ஒட்டான்குளம் கண்மாய் கரைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
அதில் ஏராளமான மரங்கள் வளர்ந்து நிழல் தருகிறது. இந்நிலையில் 18ம் கால்வாய் கரைப்பகுதியில் பராமரித்து வந்த ஏராளமான மரக்கன்றுகளை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
மரக்கன்றுகளை வெட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கூடலுார் தெற்கு போலீசில் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

