ADDED : அக் 20, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் 7 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
அக்.,12 முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அக்.18 காலை முதல் இரவு வரை தண்ணீர் வரத்து சீரானது.
இதனை வனத்துறை கண்காணித்தது.
இதனால் நேற்று காலை முதல் (அக்.19) கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது.
வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.-