/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
ADDED : நவ 10, 2024 05:02 AM

--பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் 6 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் நேற்று முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி பாம்பாற்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதிகளில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
நவ.3 ல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. நேற்று முன்தினம் அருவியில் நீர் வரத்து சீரானது. இதனை தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு நேற்று நவ.9 முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்தனர்.
சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.-