/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதாம், முந்திரி, வால்நட் திருட்டு
/
பாதாம், முந்திரி, வால்நட் திருட்டு
ADDED : டிச 23, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பொம்மைய கவுண்டன்பட்டி அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மதுரை வில்லாபுரம் திவாகரன் 26, மேலாளராக பணிபுரிகிறார்.
கடையில் உள்ள இருப்புகளை சரிபார்த்த போது, பாதாம், முந்திரி, வால்நெட், நெய் டப்பாக்கள், நல்லெண்ணை பாக்கெட்டுகள் இருப்பு வித்தியாசம் இருந்தது. கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவரும் பொருட்களை திருடுவது பதிவாகி இருந்தது. திவாகரன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

