/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பாதாம், முந்திரி திருட்டு
/
ஆண்டிபட்டி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பாதாம், முந்திரி திருட்டு
ஆண்டிபட்டி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பாதாம், முந்திரி திருட்டு
ஆண்டிபட்டி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பாதாம், முந்திரி திருட்டு
ADDED : டிச 07, 2024 08:18 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டியில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றும் பார்த்திபன் 34, டிசம்பர் மாத துவக்கத்தில் பொருட்கள் இருப்பு குறித்து கணக்கு சரிபார்த்தார்.
இதில் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சரி பார்த்துள்ளனர்.
அதில் அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத இரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.55 ஆயிரம் மதிப்பிலான பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, நெய், எண்ணெய், வால்நட் ஆகிய பொருட்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
கேமராவில் பதிவான காட்சிகளுடன் பார்த்திபன் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ.,மணிகண்டன் மற்றும் போலீசார் திருடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.