/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு
/
இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு
இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு
இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு
ADDED : பிப் 03, 2025 06:06 AM

மூணாறு: ராஜமலையில் வரையாடுகளை காண அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவதை தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன.அவற்றை காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு வரையாடுகளின் பிரசவ காலம் தவிர ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். தற்போது வரையாடுகளின் பிரசவ காலம் என்பதால் நேற்று (பிப்.1) முதல் பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஏப். ஒன்றில் பூங்கா திறக்கப்படும்.
அதனை அறியாமல் வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பதை தவிர்க்கும் வகையில் ஆர்க்கிட்டோரியம், பேட்டரி கார், டிரக்கிங் ஆகிய வசதிகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.
பேட்டரி கார்:ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான ஐந்தாம் மைலில் இருந்து செக்போஸ்ட் வரை பசுமையான தேயிலை தோட்டங்களை ரசித்தவாறு பேட்டரி காரில் பயணிக்கலாம்.
ஆறு இருக்கைகள் கொண்ட பேட்டரி காரில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் பயணிக்க ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
டிரக்கிங்:அதேபோல் 5ம் மைல் பகுதியில் இருந்து காடுகள், தேயிலைத் தோட்டங்கள் வழியாக 3 கி.மீ.,துாரம்'டிரக்கிங்' அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.500. தவிர ஐந்தாம் மைலில் உள்ளஆர்க்கிட்டோரியத்தைபயணிகள் பார்த்து ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

