ADDED : ஜன 14, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அருகே தர்மாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1989--1990ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 5 மாணவியர் உள்பட 23 மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப்பின் வைகை அணையில் சந்தித்து தங்கள் குடும்பங்களுடன் சந்தித்து பள்ளி நாட்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தங்களின் ஆசிரியர்களான ஆதிநாராயணன், கனகராஜ் ஆகியோர்களை கவுரவப்படுத்தி நினைவு பரிசுகள் வழங்கினர். சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் தர்மர், முருகேசன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர். மாறாத அன்புடன் 35 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

