ADDED : செப் 27, 2026 04:40 PM
போடி, செப். 28--–
போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1976 -–77 ஆம் ஆண்டில் 11 ம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் செந்தில்தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் இனாயத் உசேன்கான், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்த னர். ஒருங்கிணைப்பாளர்கள் சொரூபன், சந்திரசேகரன், சண்முக சுந்தரம் வரவேற்றனர்.
முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், ராஜு ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண் டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பா ளர்கள் நாகராஜ், முத்துராமலிங்கம், அபுதாகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல், வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
