தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : செப் 27, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1976 --77 ல் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் செந்தில்தியாகராஜன் தலைமை வகித்தார்.

செயலாளர் இனாயத் உசேன்கான், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் சொரூபன், சந்திரசேகரன், சண்முக சுந்தரம் வரவேற்றனர்.

முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், ராஜு ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜ், முத்துராமலிங்கம், அபுதாகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல், வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us