UPDATED : அக் 11, 2026 05:28 PM
ADDED : அக் 11, 2026 05:17 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் என்.எஸ்.கே.பி.
மேல்நிலைப் பள்ளியில் 1975–-76ல் எஸ்.எஸ்.எல்.சி., படித்த 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தனர். இதனை பொன்விழா ஆண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளி தாளாளர் ராம்பா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கடந்த கால நினைவுகளை நினைவுகள், அனுபவங்களை பரிமாறி கொண்டனர். பயிற்றுவித்த ஆசிரியர்கள் நாகராஜ், ராஜன், சுருளியப்பன் ஆகியோரை கவுரவித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
