/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
40 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
40 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
40 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
40 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 08, 2024 05:12 AM

போடி, : போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் 10 ம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இப்பள்ளியில் 1983ல் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 10 ம் வகுப்பு படித்தனர். தற்போது 40 ஆண்டுகளுக்கு பின் 10 ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சித்தையன், ஆறுமுகம், ராஜசேகர், வண்டலுார், சிவராம், ராஜூ, மகாராஜன், கண்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். 40 ஆண்டுகளுக்கு பின் 125 நபர்கள் சந்தித்து தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை, அன்பை பரிமாற்றம் செய்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், முத்துக்குமரன், அகிலா, சேகர், மணிகண்டன், கங்காதரன், தெய்வேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் முன்னாள் ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ.ஒரு லட்சம் மதிப்பில் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கான பசுமை பலகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்குவது, நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.