/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை வழிபாடு
/
வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை வழிபாடு
ADDED : நவ 20, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை பூஜை, வழிபாடு நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், தேனி உட்பட 21 வகையான அபிஷேகங்கள், மலர் அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவூற்று வேலப்பர் கோயிலில் மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் சுனையில் நீராடிய பக்தர்கள் வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

