/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செவ்வந்திப் பூ விலை அதிகம்: விளைச்சல் குறைவு
/
செவ்வந்திப் பூ விலை அதிகம்: விளைச்சல் குறைவு
ADDED : ஆக 24, 2025 03:58 AM

கூடலுார்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செவ்வந்திப் பூ விலை அதிகரித்துள்ள நிலையில், விளைச்சல் குறைவானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுாரில் பெருமாள் கோயில், கழுதை மேடு, கல்லுடைச்சான் பாறை, பளியன்குடி, 18ம் கால்வாய் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் செவ்வந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆக.27ல் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செவ்வந்திப் பூ அறுவடை பணிகள் துவங்க உள்ளன. விலை திருப்திகரமாக இருந்த போதிலும் விளைச்சல் குறைவானது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு விலை கிலோவுக்கு ரூ.40 முதல் 50 வரை இருந்தது. விலை மிக குறைவாக இருந்ததால் அறுவடை கூலி கூட கொடுக்க முடியாத நிலையில் பல விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே விட்டுவிட்டனர். தற்போது கிலோவுக்கு ரூ.100 முதல் 250 வரை விலை உள்ளது.
ஆனால் சமீபத்தில் பெய்த தொடர் மழைக்குப் பின் கடுமையான வெப்பம் நிலவுவதால் செடிகளில் பூ கருகி 40 சதவீதம் மட்டுமே வரத்து உள்ளது. விலை அதிகமாக உள்ள நேரத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.