/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அம்மச்சியாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
அம்மச்சியாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 22, 2024 05:48 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மச்சியாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் மகா கணபதி யாக வேள்வி, கிராமத்தின் அனைத்து தெய்வ வழிபாட்டுடன் புனித தீர்த்த குடம் அழைத்து வரப்பட்டது.
2ம் நாள் நிகழ்ச்சியில் கோ பூஜை, விநாயகர் பூஜையுடன் அன்னை காளி அம்மனுக்கு 2ம் கால யாக வேள்வி, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, மூலவர் அம்பாள் பிரதிஷ்டை நடந்தது.
3ம் நாள் நிகழ்ச்சியில் கோ பூஜை, நாடி சந்தானம், காளியம்மனுக்கு 4ம் கால யாக வேள்வி, அபிராமி அந்தாதி, சாற்று முறை, வேத விண்ணப்பம் உட்பட பல பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து யாத்ராதானம் செய்தல், புனித தீர்த்த குடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் அம்மனுக்கு பால், பழம், தயிர், சந்தனம், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது.
சிறப்பு அலங்காரத்திற்கு பின் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகம், அன்னதானம் நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அம்மச்சியாபுரம் கிராம பொது மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.