/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அம்மச்சியாபுரம் தெருக்களில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
/
அம்மச்சியாபுரம் தெருக்களில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
அம்மச்சியாபுரம் தெருக்களில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
அம்மச்சியாபுரம் தெருக்களில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
ADDED : ஏப் 11, 2025 05:20 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மச்சியாபுரத்தில் ரோடு, தெருக்களில் தேங்கும் மழை நீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இக்கிராமத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மழைநீரை கடத்துவதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. சில இடங்களில் வடிகால் உயர்ந்தும் தெருக்கள் தாழ்ந்தும் இருப்பதால் சிறு மழை பெய்தாலும் தெருக்களில் சில நாட்கள் மழை நீர் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. தேங்கிய மழை நீரில் வாகனங்கள் செல்வதால் ரோடு சேதம் அடைகிறது.
அம்மச்சியாபுரம் மெயின் ரோடு, பண்டிதகாரர் கோயில் தெருவில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மழை நீரை கடத்துவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.