/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளிருக்கு அஞ்சி கூடாரத்தில் தங்கும் முதிர்ந்த தம்பதி
/
குளிருக்கு அஞ்சி கூடாரத்தில் தங்கும் முதிர்ந்த தம்பதி
குளிருக்கு அஞ்சி கூடாரத்தில் தங்கும் முதிர்ந்த தம்பதி
குளிருக்கு அஞ்சி கூடாரத்தில் தங்கும் முதிர்ந்த தம்பதி
ADDED : பிப் 16, 2024 06:13 AM

மூணாறு: சின்னக்கானலில் காட்டு யானை சேதப்படுத்திய ஷெட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதியினர் குளிருக்கு அஞ்சி வாடகை கூடாரத்தில் தங்கி வருகின்றனர்.
சுற்றுலா வருவோர் பொழுது போக்கிற்காக கூடாரத்தில் தங்குவதை பார்த்துள்ளோம். ஆனால் குடியிருக்க வசதி இன்றி வாடகை கூடாரத்தில் வயது முதிர்ந்த தம்பதியினர் தங்கி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் 69. இவரது மனைவி விஜயம்மா 67.
2010-ல் தாமஸ் காட்டு யானையிடம் சிக்கி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் அவர்கள் வசித்த குடியிருப்பை காட்டு யானைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சேதப்படுத்தியது. குடியிருப்பை அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் அதனை சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இருவரும் அங்குள்ள ஷெட்டில் வசிக்கின்றனர்.
தற்போது குளிர் காலம் என்பதால் ஷெட்டில் வசிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
அதனால் குளிருக்கு அஞ்சி ஷெட்டினுள் வாடகைக்கு வாங்கிய கூடாரத்தில் இருவரும் தங்கி வருகின்றனர். அதற்கு வாடகை கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் வசூலிக்கின்றனர்.
புதிய கூடாரம் ரூ.4 ஆயிரத்திற்கு விலைக்கு கிடைக்கும் என்பதால் வாடகை கொடுக்கும் தொகையில் புதிய கூடாரம் வாங்குமாறு சிலர் தாமஸிடம் யோசனை அளித்தனர்.