/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் வாரச்சந்தை இணைப்புக்கு பாதை தேவை
/
ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் வாரச்சந்தை இணைப்புக்கு பாதை தேவை
ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் வாரச்சந்தை இணைப்புக்கு பாதை தேவை
ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் வாரச்சந்தை இணைப்புக்கு பாதை தேவை
ADDED : மார் 07, 2024 06:03 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வாரச்சந்தை பகுதிக்கு பாதை அமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும். நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள், நகர் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் வாரச்சந்தையை பயன்படுத்திக் கொள்கின்றனர். தற்போது வாரச்சந்தையில் தினசரி கடைகளும் அதிகரித்து வருகிறது. ஏத்தக்கோயில், சித்தயகவுண்டன்பட்டி, மேக்கிழார்பட்டி, ரெங்கராம்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, மணியக்காரன்பட்டி உட்பட பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஏத்தக்கோயில் ரோடு ரயில்வே கேட் அருகில் இருந்த ஓடை வழியாக வாரச்சந்தை பகுதிக்கு எளிதில் சென்று வந்தனர். இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைத்தபோது பொதுமக்கள் சென்றுவந்த பாதை அடைபட்டது. இதனால் இப்பகுதி மக்கள் தற்போது ஒரு கி.மீ., தூரம் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டை சுற்றிச் செல்லவேண்டி உள்ளது. போக்குவரத்து நெருக்கடியும் ஆண்டிபட்டியில் அடிக்கடி ஏற்படுகிறது. நகர்ப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடுக்கு மாற்றுப்பாதையாக ரயில்வே ரோடு மற்றும் வாரச்சந்தை இணைப்பு பாதையை பயன்படுத்த முடியும்.
பல கிராம மக்களின் சிரமமும் குறையும். எனவே சுரங்கப்பாலம் அருகே ஒடையில் சிறு பாலத்துடன் புதிய பாதை அமைத்துத்தர ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

