/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தை காயம் அடைந்ததால் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு
/
குழந்தை காயம் அடைந்ததால் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு
குழந்தை காயம் அடைந்ததால் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு
குழந்தை காயம் அடைந்ததால் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு
ADDED : ஆக 15, 2025 02:43 AM
தேனி: தேனி அருகே மதுராபுரியில் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற குழந்தை கீழே விழுந்து காயமடைந்ததால், அந்த மையத்திற்கு குழந்தையின் தந்தை பூட்டு போட்டார்.
பெரியகுளம் தாலுகா மதுராபுரி மின்வாரிய அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்திருந்தது. இந்நிலையில் மையத்திற்கு சென்ற 3 வயது பெண்குழந்தை மையத்தில் இருந்து வெளியே வந்த போது கீழே விழுந்து காயமடைந்தது. இச்சம்பவம் பற்றி அறிந்த குழந்தையின் தந்தை தன்ராஜ் அம் மையத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி இல்லை என கூறி மையத்தை பூட்டு போட்டு பூட்டினார். தகவலறிந்து ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி தலைமையில் போலீசார், பி.டி.ஓ., சென்று குழந்தையின் பெற்றோரிடம் பேசினர்.
இதனை தொடர்ந்து அருகில் இருந்த நுாலக கட்டடத்தில் அங்கன்வாடி செயல்படும் என்றும், சேதமடைந்த அங்கன்வாடி இடித்து புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தனர்.