/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
/
தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
ADDED : ஆக 15, 2025 02:43 AM
தேனி: மாவட்டத்தில் 8 இடங்களில் மட்டும் விநாயகர் சிலை கரைக்க வேண்டும் என விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில், எஸ்.பி., சினேஹா பிரியா முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர். சிலை அமைக்கும் இடம், ஒலி பெருக்கி, மின் விளக்கு உள்ளிட்டவற்றிற்கு மின்வாரியம், தீயணைப்பு துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும். மாசு ஏற்படுத்தும் பொருட்களில் சிலை தயாரிக்க கூடாது.
பீடத்துடன் சிலை 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் அமைக்க கூடாது. சிலைகள் வைக்கும் இடத்தில் அரசியல் கட்சியினர் பெயர் பலகை வைக்க கூடாது. பிற மத வழிபாட்டு தலங்கள் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. ஊர்வலத்தில் ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது. வெடி பயன்படுத்தக்கூடாது.
ஒன்பது இடங்கள் எவை பெரியகுளம் பாலசுப்பிரமணியன் கோவில் அருகே வரகாநதி, ஆண்டிபட்டியில் பெரியகுளம் ரோடு வைகை ஆறு, வருஷநாடு மொட்டப்பாறை செக்டேம், போடி புதுார் கொட்டக்குடி ஆறு, உத்தமபாளையம் ஞானம்மாள் கோவில் அருகே, கம்பம் சுருளிபட்டி ரோட்டில், சின்னமனுாரில் மார்க்கையன் கோட்டை, தேனியில் அரண்மனைப்புதுார் முல்லைபெரியாற்றில் மட்டும் கரைக்க வேண்டும். விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.