/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு: பெண்கள் வாக்குவாதம்
/
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு: பெண்கள் வாக்குவாதம்
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு: பெண்கள் வாக்குவாதம்
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு: பெண்கள் வாக்குவாதம்
ADDED : ஜூன் 03, 2025 12:53 AM
கம்பம்: கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்காக நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்ற பெண்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேற்று காலை கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.
வட்டார அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் முருகன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். கம்பம் வட்டாரத்தில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 350 பேர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தன.
அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், காலையில் கும்பலாக வந்து, அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் 350 பேர்களில் மாலை 6:00 மணி வரை 200 பேர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடந்தது.
காலை முதல் இரவு வரை கைக் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள், அதிகாரிகளுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இடையில் ஆளும்கட்சி பிரமுகர்கள் வந்து, 'ஏற்கெனவே முடிவாகி விட்டது.
ஏன் வீணாக காத்துக் கிடக்கிறீர்கள்' என்று கூறியதால் பல பெண்கள் கொந்தளித்தனர். அதிகாரிகளின் திட்டமிடப்படாத நேர்காணல் நிகழ்ச்சியால் பெண்கள் இரவு வரை அவதிப்பட்டனர்.