/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணிக்கவாசகர் கோயிலில் நாளை ஆனித் திருமஞ்சனம் விழா துவக்கம் ஜூன் 30 குருபூஜை, சுவாமி வீதி உலா

ADDED : ஜூன் 21, 2025 12:42 AM
சின்னமனுார்: சின்னமனுாரில் மாணிக்கவாசகர் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன துவக்க விழா நாளை( ஜூன் 22 ) துவங்குகிறது.
தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனுாரில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் நாளை ( ஜூன் 22 ) முதல் துவங்குகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு சிவனடியார்கள் பங்கு பெறும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வீதி உலா வருவார். மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான், பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.
ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை, அன்று சுவாமிகள் வீதி உலா வரும் ஜூன் 30ல் நடைபெறும். ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஜுலை 2 ல் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறும். விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.