ADDED : ஏப் 28, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் திருமஞ்சனக்குடம் அழைத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் நடந்தன.
இரவில் மாவிளக்கு எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 2ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். காவடி பால்குடம் தீச்சட்டி செலுத்தும் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

