/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிப்பு
/
அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிப்பு
ADDED : பிப் 04, 2024 03:36 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பெரியகுளம் வடகரை பழைய பஸ்ஸ்டாண்டில் அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தலைவர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் வடபுதுபட்டி ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ் மரியாதை செலுத்தினார். நகரச் செயலாளர்கள் பழனியப்பன், கிருஷ்ணக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான் மரியாதை செலுத்தினார்.
நகரச் செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நிர்வாகிகள் சிவக்குமார், அன்பு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அ.ம.மு.க., சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் மரியாதை செலுத்தினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அபுதாஹிர், நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, கவுன்சிலர்கள் வெங்கடேசன், பால்பாண்டி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.-