/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை
/
வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை
ADDED : நவ 28, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க திருப்பணிகள் துவங்க உள்ளது.
அனைத்து பணிகளும் தங்குதடையின்றி சிறப்பாக நடப்பதற்கு கோயிலில் நவ.25 முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நவ. 27 வரை மூன்று நாட்கள் நடந்தது.
பவித்ரம் உற்ஸவம் பூஜையில் வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், நவக்கிரகங்களில் தெய்வங்கள், விநாயகர், நாகர் உட்பட ஏராளமான பரிவார தெய்வங்களுக்கு பவித்திர மாலை அணிவித்து பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பவித்திர மாலை வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று
வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.--