UPDATED : அக் 25, 2026 04:47 PM
ADDED : அக் 25, 2026 04:44 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் பகுதி கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அன்னபிஷேகம் பூஜை கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு (சிவன்) அன்னபிஷேகமும், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னபிஷேகம், தையல் நாயகி அம்மன் கோயிலில் வைத்தீஸ்வரனுக்கு அன்னபிஷேகம், கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிவனுக்கு அன்னபிஷேகம், கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதருக்கு அன்னபிஷேகம் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
