ADDED : மார் 08, 2024 01:35 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் 53வது ஆண்டு விழா நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமை வகித்து திருப்பலி பூஜை நடத்தினார். கல்லூரி செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி, முதல்வர் சேசுராணி வரவேற்றனர்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் வில்சன் ஆராய்ச்சியை நிறைவு செய்த பேராசிரியர்கள், ஆய்வு கட்டுரை வெளியிட்ட பேராசிரியர்கள், ஆய்வில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கி, வாழ்த்தினார்.
பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள், வெள்ளி விழா காணும் அலுவலக பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. விலங்கியல் துறை இணை பேராசிரியர் சகாயராணி நன்றி கூறினார்.
