/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்கள் கருத்தடை ஆப்பரேஷனுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவிப்பு அழைத்து வருபவர்களுக்கு ரூ.200 பரிசு

ADDED : டிச 20, 2024 03:38 AM
கம்பம்: ஆண்களுக்கான கருத்தடை ஆப்பரேஷனுக்கு ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்குவதுடன் அழைத்து வருபவர்குளக்கு ரூ.200 பரிசு வழங்கப்படும் என குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு நவ. 28 முதல் டிச.4 வரை ஆண்களுக்கான வாசக்டமி கருத்தடை ஆப்பரேஷன் சிறப்பு முகாம்கள் நடந்தது.
சிறப்பு முகாம்களில் வட்டாரத்திலும் குறைந்தது 5 பேர்களுக்கு கருத்தடை ஆப்பரேசன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 33 ஆப்பரேஷன் நடந்தது.
இந்தாண்டு 50 பேர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேற்று வரை 7 சிறப்பு முகாம்கள் நடத்தியும் ஒருவர் கூட ஆப்பரேஷன் செய்யவில்லை. இதனால் அதிகாரிகள் விரக்தியடைந்தனர்.
கடந்தாண்டு சிறப்பு முகாம்களில் ஆப்பரேஷன் செய்து கொண்ட ஆண்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1100 மற்றும் கலெக்டர் ரூ.3900 கொடுத்து ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு கலெக்டர் ஊக்கத் தொகை அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே சிறப்பு முகாம்களில் இதுவரை ஒருவருக்கு கூட ஆப்பரேஷன் செய்ய முன்வரவில்லை.
குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புசெழியன் கலெக்டர் ஷஜீவனாவிடம் விபரம் கூறினார். கடந்தாண்டு போலவே வாசக்டமி ஆப்பரேஷன் செய்யும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இது தொடர்பாக துணை இயக்குநர் கூறுகையில், இந்த ஆப்பரேஷன் செய்வதால் இல்லற தாம்பத்யத்திற்கு வாழ்விற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. தழும்பு, வலி இருக்காது. ஒரு சில நிமிடங்களில் ஆப்பரேஷன் முடிந்து வீட்டிற்கு சென்று விடலாம். பக்க விளைவுகள் ஏற்படாது. ஆப்பரேஷன் செய்ய ஆண்களை அழைத்து வருபவர்களுக்கும் ஊக்கத் தொகை ரூ.200 வழங்கப்படும் என்றார்.