/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
/
தேனி நகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தேனி நகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தேனி நகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 02, 2025 06:14 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஏகராஜின் அரசு குடியிருப்பில் நேற்று 13 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்து ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டுவைச் சேர்ந்தவர் ஏகராஜ். இவர் தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக உள்ளார். இவர் 2019 முதல் 2024 வரை சென்னை தலைமைச் செயலகம், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.50 கோடி மதிப்பிலான சொத்துசேர்த்துள்ளதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
சோதனை
இதனையடுத்து பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள தேனி நகராட்சி ஊழியர்கள் குடியிருப்பில் கமிஷனர்வீட்டிற்கு நேற்று காலை 7:15 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான 7 போலீசார் சென்றனர். கமிஷனர் சென்னைஅய்யப்பன்தாங்கலில் குடும்ப நிகழ்ச்சிக்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்து சென்ற நிலையில் அவரின் அனுமதியுடன் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், வாட்ச்மேன் மணிகண்டன் முன்னிலையில் வீட்டின் கதவுகள், மற்றும் பீரோவில் இருந்த பூட்டுக்களை உடைத்து போலீசார் சோதனை செய்தனர். இச்சோதனை காலை முதல் இரவு 8:00 மணி வரை 13 மணி நேரம் நடந்தது.
போலீசார் கூறுகையில் 'சொத்துக்கள் குறித்து முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றை கைப்பற்றி உள்ளோம். உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மேல் நடவடிக்கை தொடரும்' என்றனர். இந்நிலையில்திருவள்ளுவர் பள்ளிபட்டில் உள்ள கமிஷனர் ஏகராஜ் வீட்டிலும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.