/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
ADDED : ஜூன் 27, 2025 05:24 AM

தேனி: தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் போதை பொருள் தடுப்பு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு தொடர்பாக ஊர்வலம் பங்களாமேடு ஆர்.சி., உயர்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கியது. கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் துவக்கி வைத்தார். கலால் உதவி ஆணையர் முத்துலட்சுமி, தாசில்தார் சதீஷ்குமார், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் வழியாக பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.
தேனி பங்களாமேட்டில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலத்தை எஸ்.பி., சிவபிரசாத் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., தேவராஜ் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி, டிராபிக் இன்ஸ்பெக்டர் சஜூக்குமார், தனிப்பிரிவுஇன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேருசிலை வழியாக, பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகே நிறைவு பெற்றது. .
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் ஒழிப்பு எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஆண்டிபட்டி: அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சண்முகசுந்தரபுரம், தேக்கம்பட்டி, கொத்தப்பட்டி,கொண்டம் மநாயக்கன்பட்டி,ரங்கசமுத்திரம் அரசு உயர் நிலை மேல்நிலைப்பள்ளிகள், சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் துவக்கி வைத்தார். ரங்கசமுத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் குமார் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை ஜூனியர் ரெட் கிராஸ் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரவணகுமார், நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். ஆண்டிபட்டி மெயின் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் சக்கம்பட்டியில் முடிந்தது.
போடி: ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி, டவுன் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், சுப்புலட்சுமி தலைமை வகித்தனர். எஸ்.ஐ.,க்கள் விஜயராமன், குருகவுதம், போக்குவரத்து எஸ்.ஐ., செல்வக்குமார், பள்ளித் தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை பள்ளித் தலைவர் செந்தில் தியாகராஜன் துவக்கி வைத்தார்.