UPDATED : நவ 04, 2026 11:17 AM
ADDED : நவ 04, 2026 11:15 AM

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி., பிரவீன் கவுதம் தலைமையில் நடந்தது. பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன், செயலாளர் இனாயத் உசேன்கான், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி, போடி டவுன் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மணிகண்டன் முன்னிலை வகித்தனர். பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் போதைப் பொருள் ஒழிப்புக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூடலுார்: என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்குத் துறையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், பொருளாளர் சிவாபகவத் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் வெங்கட்குமார் வரவேற்றார்.
மதுவிலக்குத்துறை சப் கலெக்டர் பஞ்சாபிகேசன், உணவு வழங்கல் மாவட்ட அலுவலர் சசிதீபா, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சவரியம்மாள் தேவி போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பேசினர்.
கூடலுார் தெற்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்ட கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் மதுவிலக்குத் துறை அதிகாரிகள் கூடலுார் எல்.எப்.ரோடு, மெயின் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருள் குறித்து சோதனை மேற்கொண்டனர். இவர்கள் வருவது முன்கூட்டியே தகவல் கசிந்ததால் போதைப் பொருட்கள் சிக்க வில்லை.
