UPDATED : நவ 15, 2026 04:53 PM
ADDED : நவ 15, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
தேனி: மாநிலத்தில் போதை பொருட்கள் பயன்படுத்தி இறப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போலீசார், போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் போதை பொருட்கள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திற்குள் போதை பொருட்கள் விற்பனையை கண்டறிந்தால் உடனடி வழக்கு பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். பிற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போலீசார் போதை பொருட்கள் விற்பனை, கடத்தல், பயன்பாட்டை தடுக்க தீவிர ரோந்து, சோதனைகளில் ஈடுபடுமாறு எஸ்.பி., பிரவீன் கவுதம் அறிவுறுத்தி உள்ளார்.
