/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பு இல்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள் தாராளம்
/
பராமரிப்பு இல்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள் தாராளம்
பராமரிப்பு இல்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள் தாராளம்
பராமரிப்பு இல்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள் தாராளம்
ADDED : ஜூலை 19, 2025 12:43 AM

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி உட்பட்ட பாலாஜி நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா பராமரிப்பு இன்றி உள்ளதால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி வருகிறது.
இங்குள்ள பாலாஜி நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.40 லட்சம் செலவில் பூங்கா, சுகாதார வளாகம், ராட்டினம், சறுக்கு, ஊஞ்சல் போன்ற உடற்பயிற்சி சாதனங்களுடன் அமைக்கப்பட்டது. உரிய பாரமரிப்பு இன்றியும், வடக்கு பகுதியில் சுற்றுச் சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளது. நடை மேடை சேதம் அடைந்து மண் பாதையாக உள்ளதால் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைகின்றனர். இரவில் குடிமகன்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறி உள்ளது.
இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வரும் இளைஞர்கள், பொதுமக்கள் சிரம் அடைகின்றனர். ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்காவை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

