/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொகுப்பு வீடுகள் இடிந்து பெண் பலி; 2 பேர் காயம்
/
தொகுப்பு வீடுகள் இடிந்து பெண் பலி; 2 பேர் காயம்
ADDED : அக் 20, 2024 01:36 AM

ஆண்டிபட்டி,:தேனி மாவட்டம், வருஷநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் கிழக்குத்தெருவில் சின்னப்பொண்ணு, 55, வசித்து வந்தார். கணவரை இழந்த இவர், பராமரிப்பு இல்லாத தன் பழைய தொகுப்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பலத்த மழையால் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். கடமலைக்குண்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி அவரது உடலை மீட்டனர். வருவாய்த்துறையினரும் விசாரிக்கின்றனர்.
அதே போல, மயிலாடுதுறை மாவட்டம், கேசிங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்.
இவருடன், மனைவி, இரு மகன்கள் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலிகள். நேற்று முன்தினம் இரவு மதியழகன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் துாங்கினர்.
நேற்று அதிகாலை பழமையான தொகுப்பு வீட்டின் சிமென்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதில், மதியழகன் மகன்கள் சந்தோஷ்குமார், 17, சதீஷ்குமார், 19, ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மணல்மேடு போலீசார் விசாரிக்கின்றனர்.