/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுத்தால் புகார் செய்ய செயலி
/
வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுத்தால் புகார் செய்ய செயலி
வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுத்தால் புகார் செய்ய செயலி
வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுத்தால் புகார் செய்ய செயலி
ADDED : ஜன 05, 2024 12:52 AM

தேனி:தேர்தலின் போது விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுத்தால் பொதுமக்கள் 'cVIGIL' என்ற அலைபேசி செயலியில்(ஆப்) புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்னரே துவங்கியுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட உள்ளது. அதிகாரிகளுக்கும் தேர்தல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி மையங்ளுக்கு அலுவலர்களை தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது.
இதுகுறித்து தேர்தல்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் ஆணையம் சார்பில் 2018 'cVIGIL' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு சேகரிப்பின் போது யாராவது ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் அதனை புகைப்படம், வீடியோ எடுத்து இச்செயலி மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யலாம். புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றனர்.