/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 29, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு www.tncu.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 20 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். பிளஸ் 2, டிகிரி முடித்த 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு ஆண்டிபட்டியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அல்லது 04546 244 465 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நர்மதா தெரிவித்துள்ளார்.