/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராணுவ கல்லுாரியில் படிக்க மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
/
ராணுவ கல்லுாரியில் படிக்க மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ராணுவ கல்லுாரியில் படிக்க மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ராணுவ கல்லுாரியில் படிக்க மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 19, 2025 04:48 AM
தேனி : உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இங்கு 2026 ஜனவரியில் 8 ம் வகுப்பு சேர்வதற்கான எழுத்து தேர்வு ஜூன் 1ல் நடக்கிறது. தேர்வினை மாநில அரசு பணியாளர் தேர்வானையம் நடத்துகிறது. இத்தேர்வு எழுத்து, நேர்முக தேர்வு உடையது. தேர்வில்ஆங்கிலம், கணிதம், பொது அறிவு வினாக்கள் இடம் பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்களின் 2026 ஜன.,1ல் பதினொன்னரை வயது நிறைவடைந்த, 13 வயது நிறைவடையாதவர்களாக இருக்க வேண்டும்.
அல்லது 7 ம்வகுப்பு படிப்பவராகவோ,தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், பூங்காநகர், சென்னை 600 003 முகவரிக்கு மார்ச் 31 மாலை 5:45க்குள் அனுப்பவேண்டும். மேலும் விபரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.