ADDED : ஜன 22, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாநில அரசு சார்பில் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக் விரும்பும் திருநங்கைகள் 5 திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியிருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. விருதுக்கு awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜன.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்து, அதற்கான கையேட்டை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.