/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்
/
நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜூன் 04, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.
இதற்காக சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆண்டிபட்டி தொகுதிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாந்தி, பெரியகுளம்(தனி) தொகுதி சப் கலெக்டர் ரஜத்பீடன், போடி மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலைமையில் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.