ADDED : நவ 21, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட வேளாண் இணை இயக்குநராக சாந்தாமணி என்பவரை நியமித்து அரசு முதன்மை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.
இவர் ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஆக பணி புரிந்தார். தேனி வேளாண் இணை இயக்குனர் பணியை வைகை அணையில் இயங்கும் மாநில பூச்சி கொல்லிஆய்வகம், குறியீட்டு மைய துணை இயக்குநர் பால்ராஜ் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.