/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி நிர்வாகங்களுக்கு தனி அலுவலர்கள் நியமனம்
/
ஊராட்சி நிர்வாகங்களுக்கு தனி அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜன 08, 2025 05:36 AM
தேனி : ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் ஜன.5ல் முடிவடைந்தது. இதனால் ஊராட்சி நிர்வாகங்களை கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள், 130 ஊராட்சிகள், ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளது. இவற்றில் பதவி வகித்த மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டுகால பதவி காலம் ஜன.,5ல் நிறைவடைந்தது. இந்த ஊராட்சி நிர்வாகங்களை நியமிக்க சிறப்பு அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிக்கு தனி அலுவலராக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிவேல், உத்தமபாளையம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கம்பம், சின்னமனுார் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தணிக்கைதுறை உதவி இயக்குநர் சிவக்குமார் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சிகளுக்கு பி.டி.ஓ., நிலையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.