/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிடப்பில் கம்ப ராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் நியமனம்
/
கிடப்பில் கம்ப ராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் நியமனம்
கிடப்பில் கம்ப ராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் நியமனம்
கிடப்பில் கம்ப ராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் நியமனம்
ADDED : அக் 04, 2025 04:14 AM
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு கோயில்களிலும் கடந்த ஜூன் மாதம் அறங்காவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதே போன்று கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் அறங்காவலர்களாக கம்பத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நியமனம் செய்யவில்லை. மாவட்ட அறங்காவலர்கள் மற்றும் பிற கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பம் கோயிலில் மட்டும் அறங்காவலர்கள் நியமனம் பாராமுகமாக இருப்பது ஏன் என்பது தெரியவில்லை. கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு விரைவில் அறங்காவலர்கள் குழுவை நியமித்து, கோயில் நிர்வாகம் செம்மையாக நடைபெற ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.