/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வதேச காபி தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
சர்வதேச காபி தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 04, 2025 04:15 AM

போடி: சர்வதேச காபி தினத்தை முன்னிட்டு காபியின் பன்முகத்தன்மை, தரம், ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜ் தலைமையில் நடந்தது.
இளநிலை தொடர்பு அலுவலர் சக்திவேல், போடி அரசு மருத்துவமனை டாக்டர் கவுரி சங்கர், டாக்டர் ரோஷன், மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்தனர்.
காபி விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் ஊர்வலம் போடி ஸ்டேட் பாங்க் முன்பாக துவங்கி பஸ்ஸ்டாண்ட் வரை சென்றனர்.
காபி விவசாயிகளின் வாழ்க்கை மேம்படவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காபியின் பயன்கள் குறித்து துணை இயக்குனர், டாக்டர்கள் பேசினர்.
காபியை குடிப்பதை ஊக்குவிக்க பொதுமக்களுக்கு சூடான காபி வழங்கப்பட்டன.