ADDED : மார் 20, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் செலவீன பார்வையாளர்களாக தரன்வீர் தண்டி, விஜயேந்திரகுமார் மீனா ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளின் செலவின பார்வையாளராக தரன்வீர் தண்டி நியமிக்கப்பட்டுள்ளார். பெரியகுளம் (தனி), போடி, கம்பம் தொகுதிகளின் செலவின பார்வையாராக விஜயேந்திர குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவீனங்களை இன்று முதல் கண்காணித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

