/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
/
மாநில போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
ADDED : ஜன 10, 2025 05:37 AM
தேனி: மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கோவையில் நடந்தது. இதில்   தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியின் நான்காம், ஐந்தாம் வகுப்பு  மாணவிகள் ஷிர்த்திகா, செரின், ஜீவிதா, சாதனா, ருத்ரா,மோனிகா,விவேகா,ஜோஷிகா,ஹரிணி,கனிஸ்ரீ ஆகியோர் பங்கேற்று  கிராமிய நடன குழுப்போட்டியில் முதலிடம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி, பயிற்சி அளித்த  உதவித்தலைமை ஆசிரியைகள் ஆறுமுக ராணி, விஜயலட்சுமி, ஈஸ்வரி  ஆகியோருக்கு பாராட்டு விழா  நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரியில் நடந்தது. இவ் விழாவில்  மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜ்மோகன், நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன், பள்ளி செயலாளர் பாண்டிக்குமார் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

