/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு
/
அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு
அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு
அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு
ADDED : அக் 07, 2025 04:37 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி 2002ல் துவக்கப்பட்டது. தற்போது இக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
கல்லூரி விழா நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர மேடை வசதி செய்து தர கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில் அரசை வலியுறுத்தினர். அரசு நடவடிக்கை தாமதமானது. ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சிசுந்தரம் தனது பெற்றோர் நினைவாக ரூ.3 லட்சம் செலவில் நாடக மேடை அமைத்து கொடுத்துள்ளார். கல்லூரியில் நடந்த அவருக்கான பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
தமிழ் பேராசிரியர் விஜயா வரவேற்றார். தமிழ் துறை தலைவர் அழகர்சாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.