ADDED : அக் 07, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ.,மேல்நிலை பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் பிச்சம்பட்டியில் நடந்தது. பள்ளி தாளாளர் வஜ்ரவேல் தலைமை வகித்தார்.
தேனி சி.இ.ஓ., உஷா, டி.இ.ஓ., சண்முகவேல், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பாளர் நேருராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற 60 மாணவர்கள் கிராமத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். போதை விழிப்புணர்வு கருத்தரங்கு, ஊர்வலம் நடந்தது. குரங்கணி பகுதியில் மாணவர்களுக்கு மலை ஏற்றப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மகாலிங்கபுரத்தில் உள்ள கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர். டாக்டர் அன்புக்குமார் முதலுதவி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் வேல்முருகன், தம்பித்துரை, அழகர்ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.