/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் பயிற்சி சேர்க்கை முகாம்
/
ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் பயிற்சி சேர்க்கை முகாம்
ADDED : ஏப் 11, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் ஏப்.,15 காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் நடக்கிறது.
இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இம் முகாமில் 8,10 ம்வகுப்பு, பிளஸ் 2 கல்வித்தகுதி, ஐ.டி.ஐ.,களில் படித்து தேர்ச்சி பெற்ற, தேர்ச்சியடையாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். ஆறு மாதம் அடிப்படை பயிற்சி, ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம்.
பயிற்சின் போது உதவித்தொகை, சான்றிதழ் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.